ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜன.13ம் தேதி, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தென்னரசு என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். மேலும் படகிலிருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோகராஜ், கோபி, ஆரோக்கிய ராபர்ட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த 10 மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான 10 பேரில் 8 பேருக்கு, மீண்டும் பிடிபட்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் படகு ஓட்டுநருக்கு ஆறு மாத சிறை தண்டனை, இந்திய மதிப்பில் ரூ.11.80 லட்சம் அபராதம் விதித்தும், மற்றொரு மீனவரான ஆரோக்கிய ராபர்ட் என்பவர் 2வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டதால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை: 8 பேர் விடுவிப்பு
- ராமேஸ்வரம்
- இலங்கை கடற்படை
- ஜார்ஜ்
- சூடான்
- கனகராஜ்
- சுமித்
- பரலோகராஜ்
- கோபி?. திருக்குறள்
- ஆரோக்கிய ராபர்ட்
- பிரேம்குமார்
- தினேஷ்
- ராஜேஷ்…
