கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே போலீசாரை தாக்கிய வழிப்பறி திருடனை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சூலூர் அருகே பதுங்கியிருந்த பாலமுருகனை தனிப்படையினர் பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் தனிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர்.
