ஸ்பிக்நகர் அருகே சாலையோரம் திடீர் பள்ளம்

ஸ்பிக்நகர், பிப். 6: தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையின் ஓரமாக கடந்த சில மாதங்களாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. குழாய் பதித்த இடங்களில் மணல் கொண்டு மூடப்பட்டது. குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற போது 2 முறை ஏற்பட்ட விபத்தில், வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். அவர்களை சப்இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துணியினர், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு காப்பாற்றினர். இந்நிலையில் எரிவாயு குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதியில் எம்.சவேரியார்புரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சாலையோரம் திடீர் மண் சரிந்து குழி ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஸ்பிக்நகர் அருகே சாலையோரம் திடீர் பள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: