கீரக்களும் கிராமத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம்

 

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசின் கால் நடை பாராமரிப்புத்துறை திருவாரூர் மண்டலம், மன்னார்குடி கோட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் கால்நடை பாராமரித்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ஆறுமுகம் வழிகாட்டிதலின்படி கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூர் கிராமத்தில் டாக்டர் சந்திரன் தலைமை வகித்தார்.

மேலும் கோழி வளர்ப்போரின் பொருளாதார இழப்பைத் தடுக்கம் வகையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது கோழி வளர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு 2 மாதம் முதல் கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கால்நடை மருத்துவர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post கீரக்களும் கிராமத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: