முன்விரோத தகராறில் ஆத்திரம் பெண், வாலிபரை கத்தரிக்கோலால் குத்திய டெய்லர் கைது

விழுப்புரம், பிப். 1: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் பெண், வாலிபரை கத்தரிக்கோலால் குத்திய டெய்லரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே தந்தை பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணயின். கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் மூர்த்தி, டெய்லர். இவர்களுக்கிடையே வீட்டுமனை அளப்பதில் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் பாலசுப்ரமணியன் அவரது மனைவி தங்கமணி ஆகியோர் தங்கள் வீட்டின் பழைய காம்பவுண்டு சுவரை இடித்துள்ளனர். அப்போது மூர்த்தி எனக்கு சொந்தமான சுவற்றை எப்படிஇடிக்கலாம் என திட்டி தங்கமணியை(48) கத்தரிக்கோலால் குத்தி தாக்கியுள்ளார். தடுக்கவந்த உறவினர் சண்முகசுந்தரம் மகன் திவின்(22) ஆகியோரையும் கையில் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த தங்கமணி, திவின் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தங்கமணி அளித்த புகாரின்பேரில் டெய்லர் மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post முன்விரோத தகராறில் ஆத்திரம் பெண், வாலிபரை கத்தரிக்கோலால் குத்திய டெய்லர் கைது appeared first on Dinakaran.

Related Stories: