திருச்சி விசிக மாநாடு; இந்திய அரசியலில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தும்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அறிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளரும், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்தியா கூட்டணியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றுகின்றனர். மாநாட்டு நுழைவு பழைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் என மூன்று வாயில்களுடனும், மாநாட்டு மேடை புதிய நாடாளுமன்றம் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை முழு ஒத்துழைப்புடன் வாகன நிறுத்தம், போக்குவரத்து ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு வெகுச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமல்ல தமிழக, இந்திய அரசியலில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்த போகும் இந்த மாநாட்டில் கட்சியின் தோழர்களும், சக தோழமை கட்சியினரையும், அனைத்து சனநாயக சக்திகளையும் சனநாயகத்தை வென்றெடுக்க வருக! வருக! என அழைக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருச்சி விசிக மாநாடு; இந்திய அரசியலில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தும்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: