பத்ம விருது பெறுவதை பெருமையாக நினைக்கிறேன்: அஜித்குமார் அறிக்கை

சென்னை: கலைத்துறையில் ஆற்றியுள்ள சாதனையை கவுரவிக்கும் விதமாக, பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் அஜித் குமார், பத்ம விருது பெறுவதை பெருமையாக நினைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:  குடியரசு தலைவரால் மதிப்பிற்குரிய பத்மபூஷண் விருது பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். அவருக்கும், பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

மற்றபடி எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு அதிக பலமாக இருக்கிறது. மறைந்த என் தந்தை என்னை வாழ்த்துவார் என்றும், இதற்காக அவர் பெருமைப்படுவார் என்றும் நம்புகிறேன். என் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருக்கும் நன்றி. நேர்மையுடனும், ஆர்வத்துடனும் தொடர்ந்து சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து: தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால், தனக்கென்று தனித்த இடம் பெற்றுள்ள அஜித்குமாருக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவருக்கு பிடித்த கார் ரேசிலும் அவர் மேலும் பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

The post பத்ம விருது பெறுவதை பெருமையாக நினைக்கிறேன்: அஜித்குமார் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: