இதனை தொடர்ந்து அடுத்த முக்கிய நாளான மவுனி அமாவாசை(தை அமாவாசை) வருகிற 29ம் தேதி வருகின்றது. இந்த நாளில் புனித நீராடுவதற்காக வழக்கத்தை காட்டிலும் கூடுதல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு வருவார்கள். இதன்படி இந்த ஆண்டு மவுனி அமாவாசையன்று சுமார் 10 கோடி பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை திறம்பட நிர்வகிப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நாளை மறுநாள்(27ம்தேதி) முதல் 29ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையே குறிப்பாக சங்கம் நோஸ் பகுதியில் நடமாட்டத்தை குறைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் அங்கிருந்து திரும்பி செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக கயிறுகள், விசில்கள், பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு கோபுர குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மவுனி அமாவாசையை அடுத்து 3ம் தேதி பசந்த பஞ்சமி, 12ம் தேதி மாஹி பூர்ணிமா மற்றும் 26ம் தேதி மகா சிவராத்திரி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் கும்பமேளாவிற்கு படையெடுக்கும்.
The post மகா கும்பமேளாவில் 29ம் தேதி 10 கோடி பக்தர்கள் புனித நீராடலாம்: உ.பி. அரசு எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.