மதுரை, ஜன. 19: டூவீலரில் வந்தவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே சமயநல்லூரை சேர்ந்தவர் கருப்பையா(25). இவர் அங்கிருந்து ஆனையூர் மெயின் ரோட்டில் வண்டியை ஓட்டிச்சென்றார். அப்போது மற்றொரு டூவீலரில் வந்த 3 பேர் இவரை தடுத்து நிறுத்தினர். கத்திமுனையில் கருப்பையாவை மிரட்டி வண்டியில் இருந்து இறங்கச்செய்தனர். அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக்கொண்டனர்.
மற்றொரு நபர் அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.3ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டார். அவர்களை ஆட்டோக்காரர்கள் உதவியுடன் பிடிக்க முயன்ற போது, அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து கூடல்புதூர் போலீசில் கருப்பையா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது கூடல்புதூரை சேர்ந்த ஜான்டிரோஸ்(25), கீத்திஸ்வரன்(35) ஆகியோர் என தெரிந்தது. இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post டூவீலரில் வந்த இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவர் கைது appeared first on Dinakaran.
