அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தங்களுடைய மகனை அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை திருமணம் செய்ய தடையாக இருந்ததால், ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பஷீர் நேற்று தீர்ப்பு வழங்கினார். கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. ஆதாரங்களை அழித்ததாக நிர்மல குமாரன் நாயர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தாய் சிந்துவை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
The post குமரி அருகே காதலன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு காதலி கிரீஷ்மா, தாய்மாமா குற்றவாளிகள்: தாய் சிந்து விடுதலை: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு appeared first on Dinakaran.
