மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று தொடங்கியது. பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்ற 30 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். தற்போது வரை 700க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டுள்ளன.