கிருஷ்ணகிரி, ஜன.12: வேப்பனஹள்ளி எஸ்ஐ கண்ணன் மற்றும் போலீசார், அரியனப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடையின் பின்பகுதியில், சூதாடிக்கொண்டிருந்த பெரியஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், கொங்கணப்பள்ளி கூட்ரோடு மாலிக்(42) ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், மகராஜகடை எஸ்ஐ நடராஜன் மற்றும் போலீசார், மாட்டோனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள புளிய மரத்தடியில் சூதாடிக்கொண்டிருந்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த முரளி(32), செல்வராஜ், எம்சி.பள்ளி கூட்ரோடு முருகன்(44) ஆகியோரை கைது செய்தனர்.
The post இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.சூதாடிய 5 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.
