புதுக்கோட்டை,ஜன.10: புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம் இன்று (10ம்தேதி) நடக்கிறது. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில், கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்வு செய்திடும் விதமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் \”பணியாளர் நாள் நிகழ்ச்சி\” நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதுக்கோட்டை மண்டலத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கான நான்காவது \”பணியாளர் நாள் நிகழ்ச்சி\” இன்று (10ம்தேதி) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் நாள் நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை இன்று (10ம்தேதி) மண்டல இணைப்பதிவாளரிடம் நேரில் வழங்கலாம். மேலும், பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாணை மற்றும் பதிவாளர் கடிதங்கள், சுற்றறிக்கைக்கு உட்பட்டு உடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.