இந்நிலையில், பரமன்கேணி குப்பத்தை சேர்ந்தவர் மற்ற மீனவர்களான அரிதாஸ், ஏழுமலை, பொன்னன் ஆகிய 3 மீனவர்களும், கடலில் மீன் பிடித்துக்கொண்டு படகில் கரைக்கு வந்தபோது, ஆலம்பரை கோட்டை மீனவர் குப்பத்தை சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து, அவர்களை மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். இதனையறிந்த, பரமன்கேணி குப்பத்தை சேர்ந்தவர்கள், கடத்தி செல்லப்பட்ட தங்கள் கிராமத்தை சேர்ந்த மீனவர்களை மீட்டுத்தரக்கோரி 200க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பரமன்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்தூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடத்தப்பட்ட மீனவர்களை மீட்டுத்தரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர்.
உடனே ஆலம்பரை கோட்டை குப்பம், சூனாம்பேடு காவல் எல்லையில் வருவதால், கூவத்தூர் போலீசார் சூனாம்பேடு போலீசாரிடம் விவரத்தை சொன்ன பின், சூனாம்பேடு போலீசார் ஆலம்பரை கோட்டை குப்பத்திற்கு சென்று கடத்தப்பட்ட அரிதாஸ், ஏழுமலை, பொன்னன் ஆகிய 3 மீனவர்களையும் மீட்டு அழைத்து வந்து பரமன்கேணி மீனவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். மேலும், ஆயுதங்களுடன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆலம்பரை கோட்டை குப்பத்தை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.மீனவர்களின் திடீர் சாலை மறியலால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் கடத்தப்பட்டவர்களை மீட்கக்கோரி பரமன்கேணி குப்பம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.