மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு ஆகியோர், பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இதேபோல் புழல், காவாங்கரை கண்ணப்ப சாமி நகர், மகாவீர் கார்டன், செங்குன்றம், வடகரை, சண்முகபுரம், வட பெரும்பாக்கம், கிரான்ட் லைன், தீர்த்தங்கரைப்பட்டு, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதில், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.