புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 2020 ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவருக்கு நினைவிடம் அமைக்க தற்போது ஒன்றிய அரசு இடம் ஒதுக்கி உள்ளது. ராஜ்காட் வளாகத்தில் ஒரு பகுதியை இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒதுக்கி உள்ளது.