நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும்கூட காய்கறி வியாபாரிகள் அழுகிபோன காய்கறிகளை காவல் நிலையம் எதிரிலேயே கொட்டுவதால் மாடுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மாடுபோய் குதிரை வந்தது ‘டும் டும் டும்’ என்பது போல தற்போது குதிரைகளின் வரத்து அதிகரித்து விட்டது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சாலையின் நடுவே குதிரைகள் நின்று கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருவதால் வாகனங்களை ஓட்டமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் செவிலியர் கல்லூரியில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் குதிரைகள் நிற்பதை கண்டு அச்சத்துடன் பயந்து பயந்து நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு சாலையில் திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளை பிடித்து அதன் உரிமையாளர்களிடம் அறிவுரை கூறி இனி சாலைகளில் திரிய விடாமல் வீட்டிலேயே வைத்து பராமரிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலையில் உலா வரும் குதிரைகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.