70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்

மாமல்லபுரம்: 70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர்கள் 220 பேர் ஒன்றிணைந்து மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க முடிவு செய்து, கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் வந்து தங்கினர். அவர்கள், நேற்று மாலை 5 சொகுசு பேருந்துகளில் மாமல்லபுரம் நகருக்கு வந்தனர்.

பின்னர், ஐந்து ரதம் அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை மற்றும் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு, சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றுலா வழிகாட்டி மாமல்லபுரத்தின் சிறப்பு, புராதன சின்னங்களின் வரலாறு, செதுக்கிய மன்னர்களின் பெயர்களை தெளிவாக விளக்கி கூறினர். ஒரே நேரத்தில், 70 நாடுகளை சேர்ந்த 220 பேர் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க குவிந்ததால், புராதன சின்ன வளாகங்கள் களை கட்டி காணப்பட்டது.

The post 70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: