உத்திரமேரூர் நங்கையர் குளத்தில் பழுதான நியாயவிலை கடை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: நங்கையர் குளம் நியாயவிலை கடை பழுதான நிலையில் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சியில் நங்கையர்குளம் நியாயவிலை கடையில் நங்கையர்குளம், அம்பேத்கர் நகர், பெரியார் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 500 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், நங்கையர்குளம் அருகேயுள்ள ரேஷன் கடை கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடையின் கட்டிடத்தினை முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டிடம் பழுதாகி கட்டிடத்திற்குள் ஆங்காங்கே மேடு பள்ளமாக காணப்படுகிறது. மேலும், கட்டிடத்தின் தரைகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ரேஷன் பொருட்கள் பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களும் பழுதாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிடத்தின் சீரமைத்து தரைகளை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்திரமேரூர் நங்கையர் குளத்தில் பழுதான நியாயவிலை கடை: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: