கட்டிடம் பழுதானதால் இ-சேவை மையத்தில் ஊராட்சி அலுவலகம் புதிய அலுவலகம் கட்டுவது எப்போது? செய்யூரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்யூர்: செய்யூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதானதையொட்டி, தற்போது இ-சேவை மைய கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், புதிதாக அலுவலக கட்டிடம் எப்போது கட்டபடும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதி தாலுகா அலுவலகம் எதிரே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் இயங்கி வந்தது. இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.

இந்த பழமையான கட்டிடம் நாளடைவில் சிதிலமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு மழைக்காலங்களில் அதன் வழியாக மழைநீர் கசிந்து வந்தது. இதனால், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஊராட்சி சம்மந்தமான கோப்புகள் நனைந்து சேதமடைந்து வந்தன. இதன் காரணமாக, கடந்த சில வருடங்களுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள இ-சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இ-சேவை மைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லததால் அவ்வப்போது நடக்கும் கிராம சபை கூட்டங்கள், ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தேவைகளுக்காக அலுவலகத்தை நாடும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி மன்ற அலுவலகம் இ-சேவை மைய கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தரக்கோரி மாவட்ட கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளேன். அவர்கள், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். செய்யூர் கனரா வங்கி எதிரே ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம் உள்ளது. அங்கு தற்போது மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் கூடிய விரைவில் நல்லூர் பகுதிக்கு மின்வாரிய அலுவலகத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த சமுதாய கூடம் அமைந்துள்ள பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டால் அனைத்து தேவைகளுக்கும் வசதியாக இருக்கும். எனவே, புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட நீதி ஒதுக்கீடு செய்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள இ-சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இ-சேவை மைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லததால் அவ்வப்போது நடக்கும் கிராம சபை கூட்டங்கள், ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தேவைகளுக்காக அலுவலகத்தை நாடும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

The post கட்டிடம் பழுதானதால் இ-சேவை மையத்தில் ஊராட்சி அலுவலகம் புதிய அலுவலகம் கட்டுவது எப்போது? செய்யூரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: