காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரிசத்திரம் செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலண்டர், நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பொன்.கலையரசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை அறங்காவலர்கள், ஓய்வுபெற்ற கலெக்டர் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சாத்தப்பிள்ளை, டாக்டர் கண்ணன், ஆசிரியை ரேணுகா, பொறியாளர் வெங்கடேஷ், டாக்டர் அரிஸ்டாட்டில், தொழிலதிபர்கள் விஜயசுந்தரம், ராஜேந்திரன், அறக்கட்டளை செயலர் சாம்பசிவம், இயக்குநர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஐடிஐ மாணவர்கள் அனைவருக்கும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு மாத காலண்டர், நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஐடிஐ ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஐடிஐ முதல்வர் சத்யராஜ் நன்றி கூறினார்.
The post ஐடிஐ மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் appeared first on Dinakaran.