காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி செல்வம் பங்கேற்றார். தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரை காப்பாற்றும் அதிமுக – பாஜ கள்ளக் கூட்டணியையும் கண்டித்தும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் தலைமை தாங்கினார். இதில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட துணை செயலாளர்கள் மலர்விழி, டி.வி.கோகுல கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து பேசினர். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்பு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், ஞானசேகரன், குமணன், படுநெல்லி பாபு, சேகர், குமார், சத்ய சாய் கண்ணன், தம்பு, சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, சுந்தரமூர்த்தி, எழிலரசன், சரவணன், பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், இரா.நாகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், சிகாமணி, எஸ்.கே.பி.சீனிவாசன், இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், ராம் பிரசாத், தமிழ்செல்வன், நிர்வாகிகள் நாத்திகம் நாகராஜன், செவிலிமேடு மோகன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துசெல்வன், ஜெகநாதன், சுப்பராயன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எம்பி செல்வம் பங்கேற்பு appeared first on Dinakaran.