சென்னை: சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து 285 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்த உயரமான 36.61 அடியில் தற்போது நீர்மட்டம் 36.04 அடியை எட்டியுள்ளது. விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.