காஜல் அகர்வால் தொடங்கிய புது பிசினஸ்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், இந்தி உள்பட பல்ேவறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ல் தனது நீண்ட நாள் நண்பரும், மும்பை தொழிலதிபருமான கவுதம் கிட்ச்லுவை காதல் திருமணம் செய்த அவர், பிறகு ஒரு மகனுக்கு தாயானார். சமீபத்தில் அவர் நடித்த ‘கோஸ்டி’ படம் வெளியாகி தோல்வி அடைந்தது. தற்போது ‘இந்தியன் 2’, ‘கருங்காப்பியம்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதிய பிசினஸ் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார்.

அதற்கான அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. ‘காஜல் பை காஜல்’ என்ற இந்நிறுவனம், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். முதற்கட்டமாக ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நேரடி ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், ‘இந்நிறுவனம் மிகவும் பாதுகாப்பான மற்றும் உண்மையான பொருட்களின் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்’ என்றார்.

The post காஜல் அகர்வால் தொடங்கிய புது பிசினஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: