திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜ் களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜை காதலி கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வரும் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
The post காதலனை கொன்ற கல்லூரி மாணவி வழக்கில் 17ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.