திருப்பூர், ஜன.4: நாச்சிப்பாளையத்தை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கலெக்டா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலுச்சாமி மற்றும் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
நாச்சிபாளையம் ஊராட்சி பொங்கலூர் ஒன்றியத்திலும், பல்லடம் சட்டமன்ற தொகுதியாகவும், கோவை நாடாளுமன்ற தொகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் நாச்சிப்பாளையம் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க வழங்கப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்டவா்கள் 100 நாள் வேலை பயனாளிகள் பாதிக்கப்படுவார்கள். பட்டுப்புழு மற்றும் கோழிப்பண்ணை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். வீட்டு வரி, தொழில் வரி, காலியிட வரி என பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நாச்சிபாளையத்தை மாநகராட்சியுடன் இணைத்தால் பொங்கலூர், பெருந்தொழுவு பகுதிகளின் அடிப்படை கட்டமைப்புகள் பாதிக்கப்படும். எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
இதில் ஊராட்சி தலைவா் பங்கஜம் விஜயரத்னகுமார், விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சுந்தரமூர்த்தி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
The post நொய்யல் ஆறு தூர்வாரும் பணி; நாச்சிப்பாளையத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.