பெரம்பலூர், ஜன.4: பெரம்பலூர் புது பஸ்டாண்டிலுள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றாமல் பாதுகாக்க தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், மாவட்டச் செயலாளர்கள் பெரம்பலூர் நீல கண்டன், அரியலூர் விஸ்வநாதன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கூட்டாக அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் விவசாயிகளுக்கு கிடைத்திட அரசிடம் போராடி சலுகைகளை பெற்றுத் தந்த விவசாயிகளின் விடிவெள்ளி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் முழு திருவுருவச் சிலை தமிழகத்திலேயே பெரம்பலூரில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நன் கொடையாக கொடுத்த பணத்தைக் கொண்டு பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது கடந்த 1998 ஜனவரி 29 ஆம்தேதி நடந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு (தீர்மான எண் 264), 1998 பிப்- 27அன்று சிலை புது பஸ்டாண்டில் அமைக்கப் பட்டது. இந்த சிலையை புது பஸ்டாண்டிலிருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இடது புறத்தில் அமைக்கக்ப்படும் போதே போக்குவரத்துக்கு எந்த வித இடையூரும் இன்றி சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டது. இந்த சிலை அருகே பஸ்களும் வாகன ஓட்டிகளும் எந்த வித இடையூறும் இன்றி எளிதாக கடந்துசென்று வருகின்றனர்.
சிலை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கடந்த டிச. 31ஆம்தேதி நடைபெற்ற பெரம்பலூர் நகராட்சிக் கூட்டத்தில் பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியில் அமைந்துள்ள நாராயண சாமி நாயுடு சிலை போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளதாகக்கூறி சிலையை அகற்றி மற்ற சிலைகள் உள்ள பகுதியில் அந்த சிலை மாற்றி அமைக் கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இது விவசாயிகள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. போக்குவரத் துக்கு எந்த இடையூறும் இன்றி சாலையின் ஓரமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக விவசா யிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து அதனை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப் பிரச்ச னையில் தலையிட்டு சிலை தற்போதுள்ள இடத் திலேயே இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழக விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கி றோம் என அந்தக் கோரி க்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post உழவர் பெருந்தலைவர் சிலை அகற்றும் முடிவு appeared first on Dinakaran.
