சர்வதேச மாணவர்களுக்கு 2 சிறப்பு வகை விசா அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக இ-ஸ்டூடண்ட் விசா மற்றும் இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் எனும் 2 சிறப்பு வகை விசாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதில் இ-ஸ்டூடண்ட் விசா தகுதியான வெளிநாட்டு மாணவர்களுக்கும், இ-ஸ்டூடண்ட் எக்ஸ் விசா மாணவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட அவர்களை சார்ந்தவர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த விசாக்களை https://indianvisaonline.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தனித்தனியாக பெறலாம். ஆனாலும் விண்ணப்பத்தின் நம்பகத்தன்மை ‘ஸ்டடி இன் இந்தியா’ (எஸ்ஐஐ) ஐடி மூலம் சரிபார்க்கப்படும். எனவே, ஸ்டடி இன் இந்தியா இணையதளம் மூலமாக மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். எஸ்ஐஐ ஐடி இல்லாமல் எந்த மாணவரும் இந்தியாவில் படிக்கவோ, தங்கவோ முடியாது என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

 

The post சர்வதேச மாணவர்களுக்கு 2 சிறப்பு வகை விசா அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: