தொலைந்துபோன தங்க நகை மீண்டும் கிடைத்ததால் தாய், மகன் மகிழ்ச்சி

 

பந்தலூர், ஜன.3: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் தொலைந்து போன தங்க நகை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி பாலவாடி வலைவு பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவர் நேற்று காலை தங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதால் தங்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என சேரங்கோடு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று ஊர் மக்களுடன் சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது அடமானம் வைப்பதற்காக எடுத்து வந்த கம்மல் உள்ளிட்ட தங்க நகையை தனது மகன் கையில் கொடுத்து பத்திரமாக வைத்திருக்குமாறு கூறியுள்ளார். சேரம்பாடி பஜார் பகுதிக்கு சென்று நகையை பார்க்கும்போது மகனிடம் இருந்த நகை தொலைந்து போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை அதன்பின் நகையை எடுத்தவர் தானாக முன்வந்து சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரபோஸிடம் கொடுத்தார். இதையடுத்து அதனை அவர் நகையை தொலைத்த மல்லிகா மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அதனால் தாய் மகன் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post தொலைந்துபோன தங்க நகை மீண்டும் கிடைத்ததால் தாய், மகன் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: