கிருஷ்ணகிரி, ஜன. 1: பர்கூர் தாலுகா அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், ஆஞ்சலா மேரி ஆகியோர் பேசினர். வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரன், மல்லிகா, அன்வர்பாஷா, பாஷில்பாஷா, திருப்பதி, பரிதா, கிளை செயலாளர்கள் எல்லப்பன், குணசேகரன், இம்ரான்ேஷக், முருகன், ராஜேந்திரன், வீரபத்திரன், சுரேஷ், முருகம்மாள், உமா, மாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிகரலப்பள்ளியில் உள்ள ரேஷன் கடை வாடகையை அரசே செலுத்தி பயனாளர்களிடம் ரேஷன் அட்டைக்கு ஆண்டுக்கு ₹50 என பல ஆண்டுளாக வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். வெங்கடசமுத்திரத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு வீடுகள் கட்டி பல ஆண்டுகள் ஆகியும், அந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை எனகூறி கோஷங்களை எழுப்பினர்.
The post மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.