தஞ்சாவூரில் டிஆர்ஓ., தலைமையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்

தஞ்சாவூர், டிச. 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் டிஆர்ஓ., தலைமையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: