அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

 

திருப்பூர், ஜன.3: திருப்பூர் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 1800 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதுதவிர தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதன் பின்னர் மாணவர்களுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை என 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.இந்நிலையில் விடுமுறை முடிந்த பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சுற்றறிக்கைப்படி பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேஎஸ்சி அரசுப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ மாணவிகளும் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். மேலும், மாணவ மாணவிகளுக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

The post அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: