வள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா பேச்சு போட்டியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ராமநாதபுரம், ஜன.3: ராமநாதபுரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவிய 25 ஆண்டுகள் வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசு வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய 25 ஆண்டுகள் நிறைவையொட்டி வெள்ளி விழா ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. கருத்தரங்குகள் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சு போட்டி, வினாடிவினா போட்டிகள் நடைபெற்றன.

நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர் நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் பால சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கினார்.

முன்னதாக மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு மற்றும் துணை ஆட்சியர் கோகுல் சிங் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் மங்கல சுந்தரமூர்த்தி, நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மையம் நூலகர் அற்புத ஞான ருக்மணி நன்றி கூறினார்.

The post வள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா பேச்சு போட்டியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: