வெறிநாய் கடித்து ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு

 

கள்ளக்குறிச்சி, ஜன. 3: கள்ளக்குறிச்சியில் வெறிநாய் கடித்து ஒரேநாளில் 27 பேர் காயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கச்சிராயபாளையம் சாலை, கவரை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சில தினங்களாக சுற்றித் திரியும் வெறி நாய் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்துள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் 27 பேர்களை கடித்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

வெறிநாய் கடித்ததில் காயமடைந்த கள்ளக்குறிச்சி பெருவங்கூர் ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (42), கோட்டைமேடு சிவசங்கர்(52),  கள்ளக்குறிச்சி மோரை பாதை தெரு சவுகத்அலி (54), செக்குமேட்டு தெரு அழகம்மாள்(64), கருணாபுரம் அனுஷா(25), கள்ளக்குறிச்சி பாரதி நகர் ஜெயக்குமார் (44), மூப்பனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (29), கள்ளக்குறிச்சி வஉசி நகர் நவாப் (42) மணிகண்டன்(23), கள்ளக்குறிச்சி திலிப்குமார் (29) உள்பட 27 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறி நாயை பிடிக்க கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post வெறிநாய் கடித்து ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: