திருமங்கலத்தில் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள்: இன்று மூடப்படுகிறது

 

திருமங்கலம், ஜன. 3: திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனை அடுத்துள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருமங்கலம் பகுதியில் தண்டவாள பகுதி மற்றும் ரயில்வேகேட் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 30ம் தேதி இந்த ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்தநிலையில் இன்று (ஜன.3) மீண்டும் ரயில்வே ஸ்டேசனை அடுத்துள்ள கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட உள்ளது.

இதனால் ரயில்வே கேட்டினை கடந்து மறுபுறம் இருக்கும் காமராஜபுரம், கற்பகநகர், சோனை மீனாநகர், ஆறுமுகம் தெருக்கள், பொற்கால நகர், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம் மற்றும் ஆலங்குளம் பகுதி மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி கொள்ளும்படி, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதே போல் திருமங்கலத்திலிருந்து ஆலங்குளம், மண்டேலா நகர், பெருங்குடி வழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் 37பி டவுன் பஸ்கள் திருமங்கலம் ரயில்வே கேட் அருகேயிருந்து புறப்பட்டு சென்று திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமங்கலத்தில் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள்: இன்று மூடப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: