வெள்ளியணை பெரியகுளம் ஏரியில் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும்

கரூர், டிச. 31: கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் வெள்ளியணை தென்பாகம், மேட்டுப்பட்டி பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளியணை பெரியகுளம் ஏரி 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை அதிகளவு சீத்த முட்செடிகள் ஆக்ரமித்துள்ளன. பல ஆண்டூகளாக குளம் தூர்வாரவில்லை. குடகனாறு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வருமா? வராதா? என்ற நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த ஏரியை தூர்வார மனு அளித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த குளத்தை முறைப்படி து£ர் வாரினால் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள். எனவே, தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு, தூர் வாரி தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post வெள்ளியணை பெரியகுளம் ஏரியில் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: