உசிலம்பட்டி, டிச. 31: உசிலம்பட்டி அருகே குலைநோய் தாக்குதலால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள, நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே நெய்பயிர்களில் குலை நோய் தாக்குதலுக்கு உள்ளான நெய்பயிர்கள் கதிர்விடும் பருவத்திலேயே கருகி, காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
குலை நோய் தாக்கம் ஏற்படும் போதே 3 முதல் 5 முறை மருந்து தெளித்தும் எந்த பயனுமில்லாமல், சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்குதலால், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்தும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், கடன் வாங்கி அறுவடை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post உசிலம்பட்டி அருகே குலைநோய் தாக்குதலால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.