ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை: நடவடிக்கை கோரி தாயார் மனு

 

திண்டுக்கல், டிச 31: தனியார் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாயார் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பழநி தாலுகா போதுபட்டி ஊராட்சி மேற்குத்தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். தனியார் முதியோர் இல்லத்தில் காப்பாளராக பணி செய்கிறார். இவரது கணவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் ஒரே மகன் பழநியை அடுத்துள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மகனின் மரணம் தொடர்பாக நேற்று மாரியம்மாள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: கடந்த மாதம் இப்பள்ளியில் கணித ஆசிரியர் என் மகனை திட்டியுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு மத்தியில், எனது மகனின் உடைகளை களைந்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் நவ.19ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த வழக்கில் போலீசார் இதுவரை மேல்நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் எனது மகனின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு மனு அளித்தேன். இவ்வாறு கூறினார்.

The post ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை: நடவடிக்கை கோரி தாயார் மனு appeared first on Dinakaran.

Related Stories: