அப்போது அவர் கால் இடறியதில் நிலை தடுமாறி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். கான்கிரீட் தளத்தின் மீது அவர் விழுந்த வேகத்தில் படுகாயமடைந்தார். அங்கு தடுப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியும் அவரது தலையின் மீது விழுந்தது. அருகில் இருந்தவர்கள் உமா தாமஸ் எம்.எல்.ஏ.வை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் உமா தாமஸுக்கு முதுகு எலும்பில் படுகாயம் ஏற்பட்டதாகவும், மூளையில் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நுரையீரலில் ரத்தம் உறைந்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அதிகளவு ரத்தம் வெளியேறி இருப்பதால் அவரது உடல்நிலை குறித்து உடனடியாக எதுவும் கூறமுடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post கேரளாவில் கேலரியில் இருந்து விழுந்த காங். எம்.எல்.ஏ. படுகாயம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் உமா தாமஸுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.