இதில் இடம்பெற்ற முதல்வர் படத்தின் மீது பெண் ஒருவர் அவமானப்படுத்தும் நோக்கில் தவறாக நடந்து கொண்டார். அதை அருகில் இருந்த கார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில், அரசியல் காழ்புணர்ச்சியுடன் இந்த செயலை அவர் செய்துள்ளார். எனவே முதல்வரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட வயதான பெண்மணி மற்றும் அதை வீடியோ எடுத்து பரப்பி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிசிடிவி பதிவுகளுடன் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, கே.கே.நகர் போலீசார் பெண் மற்றும் வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீஷ் என்பவர் அந்த வீடியோவை பதிவிட்டது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த பிரதீஷ் தலைமறைாவாகிவிட்டார். தனிப்படையினர் கன்னியாகுமரிக்கு சென்று நேற்று முன்தினம் பிரதீஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து வீடியோ பரப்ப பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முதல்வர் புகைப்படத்தை அவமானப்படுத்திய பெண் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதல்வர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது: கன்னியாகுமரியில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.