சீன அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இந்த ஹேக்கிங்கை நடத்தியிருக்கலாம் என அவர்கள் சந்தேகித்துள்ளனர். கருவூல பணிகளில் தொடர்புடைய பியாண்ட் டிரஸ்ட் எனப்படும் மூன்றாம் தரப்பு சேவை வழங்கும் சாப்ட்வேர் மூலமாக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது.
இதில் பல ஊழியர்களின் கணினிகளை ஹேக்கர்கள் ரிமோட் மூலம் எடுத்து தகவல்களை திருடி உள்ளனர். ஆனால் எத்தனை அலுவலகங்களில் ஹேக்கிங் நடந்தது, எந்த வகையான ஆவணங்களை ஹேக்கர்கள் திருடியிருக்கலாம் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயம், இது ஒரு மிகப்பெரிய விதிமீறல் சம்பவம் என்பதை கருவூல அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே எப்பிஐ, சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக கடிதத்தில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சீனா மீதான இந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்துள்ளது.
The post முக்கிய ஆவணங்கள் திருட்டு; அமெரிக்க கருவூலத்திலேயே சீன ஹேக்கர்கள் கைவரிசை: எப்பிஐ தீவிர விசாரணை appeared first on Dinakaran.