குடியாத்தம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு


வேலூர்: குடியாத்தம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவன் குடியாத்தம் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறான். அப்போது சிறுவனுக்கும் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சிறுமி, திருமணம் தொடர்பாக சமூகநல அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணம் நடக்கும்போது இருவரும் மைனர்களாக இருந்தனர். இளம்பெண் தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு 18 வயது நிரம்பியதும் தெரியவந்தது. ஆனால் சிறுவனுக்கு 18 வயது நிரம்பவில்லையாம்.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடியாத்தம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: