இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பி. தயானந்த் அளித்த பேட்டி:
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ₹2.50 கோடி. புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த டாட்டூ கலைஞர் ரக்ஷித்தை கைது செய்தோம். கோவா மாநிலத்தில் இருந்து எல்எஸ்டி போதை பொருட்களும், தாய்லாந்தில் இருந்து வைஹட்ரோ கஞ்சா, இமாச்சல் மற்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ₹13 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
The post புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பதுக்கப்பட்ட ரூ.2.50 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல்: பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.