போலீசில் சமுத்திரவேல் அளித்துள்ள வாக்குமூலம்: கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதனால் பாஞ்சாலியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், மகன்கள் பெரியவர்களாகி விட்டதால் ஆசைக்கு இணங்க மறுத்தார். இந்நிலையில், அவர் கடைக்கு வந்தபோது நான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் மறுக்கவே சரமாரியாக கத்தியால் குத்தினேன். இதில் அவர் இறந்துவிட்டார். என்னை போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.