பணியில் இருந்த காவலர், உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதன்படி 12.30 மணிக்கு பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவிந்தரன் மற்றும் வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. இந்த சோதனையால் சிறிது நேரம் வடபழனி முருகன் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைதொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை பிடிக்க வடபழனி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர், மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், தரமணி ஸ்ரீராம் நகர் 2வது தெருவை சோந்த விவேக் மாறன் (35) என்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, விவேக் மாறன் பல நாட்களுக்கு முன்பு இந்த முகவரியில் வசித்து வந்ததும், தற்போது இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெறு இடம் சென்றது தெரியவந்தது.
இதனால் குழப்பமடைந்த தனிப்படை போலீசார் விவேக்மாறன் பயன்படுத்திய தனியார் வங்கி கிளைக்கு சென்று புகைப்படம் பெற்றும், அவரது செல்போன் டவர் லொகேஷன் மூலம் ஒரு வழியாக திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தெருவில் இருந்த அவரை கைது செய்தனர்.
பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், விவேக்மாறன் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக கடந்த 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதும், சம்பவத்தன்று குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. அதைதொடர்ந்து விவேக் மாறன் மீது பிஎன்எஸ் 307, 351(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
The post வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அரசு கல்லூரி ஊழியர் கைது appeared first on Dinakaran.