ஆளில்லா ரயில்வே ஸ்டேஷனில் ‘ஆட்டைய போட்ட’ 4 பேர் கைது

கோவில்பட்டி: ரயில்வே ஸ்டேஷனில் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கற்பகராஜ் (31). இவரது தம்பி மாடசாமி (29), உறவினர்கள் மாடசாமி (27), மூக்கையா (35) ஆகியோர் லோடு ஆட்டோவில் சென்று பழைய இரும்பு பொருட்களை விலைக்கு வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பழைய இரும்புகளை விலைக்கு வாங்க வந்துள்ளனர். இவர்களுக்கு எந்த பொருட்களும் கிடைக்காத நிலையில், ஊத்துப்பட்டி வழியாக மூடப்பட்ட குமாரபுரம் பழைய ரயில் நிலையம் வழியாக ஆட்டோவில் வந்துள்ளனர்.

அப்போது ரயில் நிலையத்தில் பழைய மற்றும் அகல ரயில் பாதைக்கான இரும்பு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுப்பதை பார்த்தனர். இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் ஆட்டோவை நிறுத்தி இரும்புப் பொருட்களை ஏற்றியுள்ளனர். பின்னர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து புறப்பட்ட போது, அதிக பாரத்தால் கிளட்ச் கட்டானது. இதனால் அவர்களால் ஆட்டோவை எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் ரயில்வே இரும்புப் பொருட்களை கடத்திச் செல்வது குறித்து கோவில்பட்டி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், விரைந்து சென்று ஆட்டோ மற்றும் ரயில்வே இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கற்பகராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

The post ஆளில்லா ரயில்வே ஸ்டேஷனில் ‘ஆட்டைய போட்ட’ 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: