அறக்கட்டளையில் ரூ.1500 கோடி ஊழல் ஊழலை வெளிப்படுத்தியதால் கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி

* அறக்கட்டளை நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு, போலீசார் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சென்னை: சென்னை வாழ் திருத்தங்கள் இந்து நாடார் உறவின் முறையின் தர்மபண்டு அறக்கட்டளையில் ரூ.1500 கோடி ஊழல் குறித்து வெளியிட்டதற்காக கூலிப்படை ஏவி விட்டு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அறக்கட்டளை நிர்வாகி சங்கரலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் தனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை வாழ் திருத்தங்கள் இந்து நாடார் உறவின் முறைவின் தர்மபண்டு அறக்கட்டளையின் உறுப்பினர் சங்கரலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னைவாழ் திருத்தங்கள் நாடார் உறவின் முறைவின் தர்மபண்டு அறக்கட்டையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் 7 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தேன். இந்த முறைகேடு குறித்து புகார் அளித்தற்காக என்னை கூலிப்படைகளை ஏவி விட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை கொலை செய்ய கூலிப்படை மூலம் ஏவி விடும் நபர்களுக்கு எதிரான சிசிடிவி காட்சிகளும், ஆடியோ காட்சிகளும், குறிப்பாக ரூ.1500 கோடி ஊழல் செய்ததற்கான பணம் பரிவர்த்தனை, வங்கி அதிகாரி உதவியுடன் நடைபெறும் பல கோடி ரூபாய் ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் உள்ள ஆவணங்கள் என்னிடம் உள்ளது, அதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளேன்.

கோரிக்கையாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினர் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post அறக்கட்டளையில் ரூ.1500 கோடி ஊழல் ஊழலை வெளிப்படுத்தியதால் கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: