இதனால், கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர் பேரவை சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மீனவர் பேரவை தலைவர்அன்பழகனார், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி. ஆர்.வெங்கடேஷ், பிராமணர் சங்க தலைவர் நாராயணன், ஓட்டல் வசந்த பவன் அதிபர் சீனிவாசன் ராஜா, ரவி, ராணி ரெட்டி, லயன் லிகி குமார் உள்பட ஏராளமானமீனவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெரினா கடற்கரை நடுக்குப்பத்தில் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமிதா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி ெசலுத்தினர். மேலும் இறந்தவர்களின் நினைவாக கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 500 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு அரசியல் கட்சியினர் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.
The post சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி appeared first on Dinakaran.