பனாஜி: கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது. இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 54 வயதான ஒருவர் உயிரிழந்தார். மற்ற 20 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
The post கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.