அசாமில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 24 குண்டு முழங்க அடக்கம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் இன்பராஜா(28). 2016ல் ராணுவத்தில் சேர்ந்த இவருக்கு, 7 மாதங்களுக்கு முன்பு எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் திருமணம் நடந்தது. அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் பணியாற்றி வந்த இன்பராஜா சென்ற வாகனம், கடந்த 22ம் தேதி விபத்தில் சிக்கியது.
இதில் இன்பராஜா பலியானார். அவரது உடல் சொந்த ஊரான எம்.எஸ்.புரத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கலெக்டர் சங்கீதா, எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அவருக்கு சொந்தமான தோட்டத்தில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இன்பராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post அசாமில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 24 குண்டு முழங்க அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: